search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சித்ரா ராமகிருஷ்ணா"

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • மத்திய உள்துறை அமைச்சகத்திடம் இருந்து வந்த புகாரைத் தொடர்ந்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
    • மும்பை, புனே மற்றும் பிற நகரங்களில் 10 இடங்களில் சிபிஐ சோதனை நடத்தி வருகிறது

    புதுடெல்லி:

    தேசிய பங்குச்சந்தை (என்.எஸ்.இ.) அதிகாரிகளின் தொலைபேசிகளை ஒட்டுக்கேட்டதாக என்எஸ்இ முன்னாள் தலைவர் சித்ரா ராமகிருஷ்ணா மீது சிபிஐ வழக்குப்பதிவு செய்துள்ளது. மும்பை முன்னாள் போலீஸ் கமிஷனர் சஞ்சய் பாண்டே மற்றும் என்.எஸ்.இ. முன்னாள் தலைமை அதிகாரி ரவி நரேன் ஆகியோர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மத்திய உள்துறை அமைச்சகத்திடம் இருந்து வந்த புகாரைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    அதன்பின்னர், மத்திய உள்துறை அமைச்சகத்தின் உத்தரவின் பேரில் நாடு முழுவதும் சிபிஐ சோதனை நடத்தி வருகிறது. சஞ்சய் பாண்டேவுக்கு எதிரான வழக்கு தொடர்பாக மும்பை, புனே மற்றும் பிற நகரங்களில் 10 இடங்களில் சிபிஐ சோதனை நடத்தி வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

    தேசியப் பங்குச்சந்தையின் ரகசிய தரவுகளை பகிர்ந்த புகார் தொடர்பாக பங்குச்சந்தையின் முன்னாள் தலைமை செயல் அதிகாரி சித்ரா ராமகிருஷ்ணா, மற்றொரு முன்னாள் தலைமைச் செயல் அதிகாரி ஆனந்த் சுப்ரமணியன் ஆகியோர் ஏற்கனவே கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

    ×